பதிவு செய்த நாள்
20
ஜன
2016
12:01
சென்னை: மதுரை மாவட்டம், பேரையூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கணினி தட்டச்சர், சீட்டு விற்பனையாளர், மின் பணியாளர், பதிவறை எழுத்தர், காவலர் நிலை - 2, துப்புரவு ஊழியர் என, ஆறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தட்டச்சர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சில் ஆங்கிலம், தமிழ் முதுநிலை தேர்ச்சி, கணினி இயக்குவதில் போதிய அனுபவம் வேண்டும். சீட்டு விற்பனையாளருக்கு, 10ம் வகுப்பு; மின் பணியாளருக்கு, ஐ.டி.ஐ., தேர்ச்சியுடன் மின் வாரிய, சி சான்று அவசியம். பதிவறை எழுத்தர், 10ம் வகுப்பு; காவலர் நிலை - 2, துப்புரவு ஊழியர் பதவிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள், பிப்., 1ம் தேதி மாலைக்குள் வந்து சேர வேண்டும் என, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.