29 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: புதுச்சேரியில் இன்று விடுமுறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2016 12:01
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (20ம் தேதி) 25 கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி வில்லியனுாரில் 11ம் நுாற்றாண்டில் தரும பால சோழர்களால் கட்டிய கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவில், திருக்காஞ்சி கங்காதர நதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 25 கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று 20ம் தேதி நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி நேற்று அளித்த பேட்டியில், புதுச்சேரியில் இன்று 25 கோவில்களில்கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, சனிக்கிழமை ஒரு நாள் பள்ளி, கல்லுாரிகள் இயக்கப்பட்டு விடுமுறை நாள் சமன் செய்யப்படும் என்றார்.