மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2016 11:01
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 17ம் தேதி மாலை யாகசாலை பிரவேசமும் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தில்லை ஆதீனம் சுந்தரமூர்த்தி பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலம் சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூராட்சித் தலைவர் அர்ச்சுனன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் செய்திருந்தனர். மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. பூஜைகளை சந்திரசேகர ஞானசம்பந்த சிவாச்சாரியார்கள் தலைமையில் செய்தனர். மாலை அறிவொளி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இன்று 21ம் தேதி மாலை தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.