பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
பொன்னேரி : சிதிலமடைந்து கிடக்கும், வேம்பாலீஸ்வரர் கோவிலை புனரமைக்க, 26ம் தேதி, திருப்பணிகள் துவங்குகின்றன. பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம் கிராமத்தில், வேம்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது.மேற்கண்ட கோவில், தற்போது மேற்கூரை மற்றும் கதவுகள் இன்றி திறந்தவெளியிலும், நந்தி சிலை, மண்ணில் புதைந்தும் கிடக்கிறது.சிதிலமடைந்து கிடக்கும் கோவிலினை புனரமைக்க, கிராமவாசி கள் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.இதுகுறித்து, கிராவாசிகள் கூறுகையில், கிராம மக்கள் மற்றும் பெரும் கொடையாளர்களிடம் நிதி வசூலித்து, கோவில் கட்ட உள்ளோம்.அதற்கான பணிகளை, இம்மாதம், 26ம் தேதி, துவங்க உள்ளோம். 2008ம் ஆண்டு, இதே பகுதி யில், அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு, தற்போது அது வருவாய் துறையினர்கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் புனரமைப்பின்போது, அந்த அம்மன் சிலையினையும் இங்கு வைக்க உள்ளோம், என்றனர்.