காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மன் கோவில் தை பூசத்திருவிழாவை முன்னிட்டு,கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வரும் 23ம் தேதி காலை 8மணியிலிருந்து 9மணிக்குள் தேரோட்டம்,24ல் தை பூசத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஸ்தானிகம் காளீஸ்வரக்குருக்கள் செய்து வருகின்றனர்.