பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
பொள்ளாச்சி: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை பெரிய கடைவீதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி, சமேத ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், வளர்பிறை ஏகாதசியன்று, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடப்பது வழக்கம். ஏகாதசியான நேற்று முன்தினம், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, கரும்புச்சாறு என, ஒன்பது வகை பொருட்களால் அபிேஷகம் நடந்தது. துளசி, ரோஜா, அரளி, செம்பருத்தி, மல்லி, நந்தியாவட்டை, சம்பங்கி உட்பட, ஒன்பது வகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தி இசை குழுவினர், பஜனை பாடல்களை பாடினர்.