தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2016 12:01
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு சந்தன அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தை மாத பிரதோஷத்தையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் கோவில் உள்பிரஹாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பத்கர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.