பதிவு செய்த நாள்
22
ஜன
2016
06:01
பழநி: பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற பழநி தைசப்பூச விழாற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலைவாழைப் பழங்கள் 100 டன் வரை வந்துள்ளன. பழம் வரத்துள்ளதால் விலை குறைந்துள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரைபக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழை பழங்களை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலூர், சிறுமலை, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழை பழங்கள் 100 டன் வரை வந்துள்ளன. வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஒரு பழம் ரூ.6முதல் ரூ.10 வரை விற்றது தற்போது ரூ.4 முதல் ரூ.8 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.
விலை குறைவு காரணமாக இவ்வாண்டு 150 டன் வரை விற்பனை ஆகும் என வியாபாரிகள் எதிர்பார்க் கின்றனர். வியாபாரிகள் யுவராஜ், பொன்னுச்சாமி கூறுகையில், மற்ற பழங்களில் தயார் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை விட மலைவாழைப்பழத்தில் செய்தால் ருசி அலாதியாக இருக்கும் பழநி வரும் பக்தர்களுக்காக சிறுமலை, பாச்சலார், குடகு உள்ளிட்ட பகுதியிலிருந்து பழங்கள் வந்துள்ளன. கடந்தாண்டு வாழைப்பழத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டதால் 70 டன் தான் வந்தது. இவ்வாண்டு வரத்து அதிகரித்து விலையும் குறைந்துள்ளதால் பஞ்சாமிர்தம் தயாரிக்க பக்தர்கள் வேறுபழங்களை நடவேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும், என்றனர்.