புதுச்சேரி: ஜீவானந்தபுரம் ஜலமுத்துமாரியம்மன் ஆலய 4ம் ஆண்டு தைப்பூச விழா நாளை நடக்கிறது. தைப்பூச திருநாளை முன்னிட்டு நாளை 24ம் தேதி ஜலமுத்து மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அருட்பிரகாச வள்ளல் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனையும், பகல் 11.30 மணிக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.