அன்னுார்: மொண்டிபாளையம், பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று (23ம் தேதி) நடக்கிறது. மேலைத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில், 52ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை சுவாமி திருவீதியுலா நடந்தது. இன்று (23ம் தேதி) காலை, 5:30 மணிக்கு, வெங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளுகிறார். காலை, 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. சுற்றுவட்டார மக்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். 24ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பரிவேட்டையும், 25ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.