பதிவு செய்த நாள்
23
ஜன
2016
01:01
கடலுார்: கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு, 145வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நாளை, 24ம் தேதி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம், நாளை காலை, 6:00 மணி, 10:00; பகல், 1:00; மாலை, 7:00; இரவு, 10:00 மற்றும், 25ம் தேதி காலை, 5:30 மணி என, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.