Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் 100 லிட்டர் ... மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கொண்டாட்டம் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச விழா: 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச விழா: 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
11:01

திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலில் நேற்று, தைப்பூச திருவிழாவை ஒட்டி, ஒன்றரை லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், பொது வழியில், 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணி மற்றும் மாலை, 4:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.  இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு தங்கரதத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று, தைப்பூசம், அரசு விடுமுறை என்பதால், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொதுவழியில் சென்ற பக்தர்கள், 10 மணி நேரமும்; 25, 50 மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனத்தில், குறைந்த பட்சம் மூன்று மணி நேரமும் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நிர்வாகத்தின் மீது அதிருப்தி!நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை, சிறப்பு நுழைவாயிலில், கோவில் நிர்வாகம் அனுமதிக்காமல், 100 ரூபாய் சிறப்பு தரிசன வழியில் அனுப்பினர். அங்கு, மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், ஆளும் கட்சியினர், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்தவர்களை, சிறப்பு நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், அரை மணி நேரத்தில் மூலவரை தரிசித்து திரும்பினர். இதனால் பக்தர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar