திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று, மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. காலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேக பொருட்களை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர்கள் தனித்தனியே வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். பக்தர்கள் பால் குடம், பல்வகை காவடிகளை எடுத்து வந்தனர்.