பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா, பிப்., 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாமக தீர்த்தவாரி, பிப்., 22ம் தேதி, 20 புனித கிணறுகளை தன்னகத்தே கொண்டுள்ள மகாமக திருக்குளத்தில் நடக்கிறது.இவ்விழாவினையொட்டி, நேற்று காலை, காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், புனிதநீர் நிரப்பிய கலசத்தினை வைத்து, பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து, கொடிமர விநாயகருக்கும், பந்தக்காலுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதேபோல், ஆதிகும்பேஸ்வரன் திருக்கோவில், சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் சக்கரபாணி சுவாமி திருக்கோவில் ஆகியவற்றிலும், பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.