தேனாற்றில் தீர்த்தமாடிய சுவாமி தைப்பூச விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 12:01
முருகனின் அறுபடை வீடாக விளங்கும் குன்றக்குடி திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூசவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு வெள்ளிகேடகத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி அங்கிருந்து புறப்பட்டு சின்ன குன்றக்குடிக்கு சென்றடைந்தார். அதே நேரத்தில் எதிர் திசையில் திருவேலங்குடியிலிருந்து கந்தசாமி புறப்பட்டு வந்தார். பகல் 1.40 மணிக்கு சின்னக்குன்றக்குடிதேனாற்றில் இரண்டு சுவாமிகளும் தீர்த்தமாடினர். தொடர்ந்து பழனியாயி ஊரணிக்கரையில் உள்ள மண்டபத்தில் இரண்டு சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்திஅ பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சண்முகநாத பெருமான் மலைக்கு திரும்பிய பின் கொடியிறக்கம் நடந்தது.
தைப்பூச விழாவை முன்னிட்டு தேவகோட்டையிலிருந்து 89 நகரத்தணிர் மயில் தோகை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போல், காட்டாத்தங்குடி கிரணிமத்தினர் நெல், புளி மற்றும் தங்கள் நிலத்தில் விளைவித்த தானிய பயிர்களை, வைக்கோலில் சுற்றி உருண்டையாக கட்டி கோட்டை காவடி எடுத்து வந்தனர். கணிணிரக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் பால் காவடி எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை பரம்பணிர அறங்காவலர் பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார். சிவகங்கை: சிவகங்கை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூசவிழா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஸ்கந்தர்ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மயில் வாகனத்தில் எழுந்தருளிய வேலாயுதசுவாமி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரஅ 7 மணிக்கு, குதிரை வாகனத்தில் குழந்தை வேலாயுத சுவாமி திருவீதிஉலா வந்தார். கிராமிய கலை நிகழ்ச்சிநடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.