அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.,14ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஜன.,15ல் கொடியேற்றம், பகலில் சுவாமி புறப்பாடு நடந்தது. தினமும் காலையில் சிம்மாசனத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி சுவாமி கோயிலை வலம் வந்தார். ஜன., 23ல் தேரோட்டமும், மாலை வெள்ளி மயில் வாகன புறப்பாடும் நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை, தீர்த்தவாரி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை (பொறுப்பு) ஆகியோர் செய்திருந்தனர்.