பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
பெ.நா.பாளையம்: வெள்ளக்கிணறு ஆதிவிநாயகர் கோவிலில், 35ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடமதுரை ஈஸ்வரன் கோவிலில் திருமுருகன் இறைவழிபாடு மன்றம் சார்பில், 42ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடந்தது. திருவிளக்கு வழிபாடு, தொடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில் முருகப் பெருமான் திருவீதியுலா, கரகாட்டம், வாணவேடிக் கை நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் முருகன், வள்ளி, தெய்வானை மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜோதிபுரத்தில் உள்ள ஜோதி விநாயகர் பாலமுருகன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை, மதியம் அமுது பூஜை, மாலை, 5:00 மணிக்கு, 108 பால் குடங்களுடன் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. பிரஸ்காலனி முருகன் கோவில், வீரபாண்டி பாலசுப்பிரமணியர் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.