மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணியதில், 12 லட்சத்து 71 ஆயிரத்து 268 ரூபாய் இருந்தது. காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கார்த்திக் தலைமையில், கோவில் செயல் அலுவலர் கைலாஷ், ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை யில், ஆலய தெய்வீக நற்பணி சேவாக்குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 12 லட்சத்து, 71 ஆயிரத்து 268 ரூபாயும், 94.3 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்தன.