கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவில், உறவினர்களிடையே வரன்கள் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள 15 கிராமத்தினர் பங்கேற்றனர். ஆடுகள் மற்றும் கோழிகள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்டன. புதுக்கோட்டை நிர்மலா கூறுகையில், தீபாவளி, பொங்கலை விட இது முக்கிய விழா. மாநிலம் முழுவதும் இருந்து உறவினர்கள் ஒன்று கூடுவோம். திருமணத்திற்கு வரன்கள் பார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கும், என்றார்.