திருத்தணி: தைப்பூசத்தை ஒட்டி, கற்பக விநாயகர் கோவிலில், நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருத்தணி, சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், நேற்று தைப்பூச விழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன.கோவில் வளாகத்தில் ஈஸ்வரர், அனுமான், பைரவர், தட்சணாமூர்த்தி, முருகர், நவகிரக சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.மாலை 6:00 மணிக்கு, 108 பெண்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகத்தில் திருவிளக்கு கள் ஏற்றி பூஜை நடத்தி வழிபட்டனர்.