பதிவு செய்த நாள்
27
ஜன
2016
10:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. அங்கு நேற்று காலை 8:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், தேவியர், பூதத்தாழ்வார் ஆகியோர், மகா மண்டபத்தில், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன் பின், லட்சார்ச்சனை துவங்கியது. அதைத் தொடர்ந்து, பெருமாள், தாயார் ஆகியோர், ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குலசேகர ஆழ்வார் அவதார நாள் என்பதால், அவருக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் சாற்றுமறையும் நடந்தது.