மதுரை மீனாட்சி கோயிலில் மாசி மண்டல உற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2016 11:01
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மண்டல உற்சவ திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. மதுரை மீனாட்சி கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் மாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.