திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் தைலக்காப்பு ஆண்டாள் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2016 11:01
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் தைலக்காப்பு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு தை மாதத்தில் 5 நாள் திருக்கல்யாண மகோத்சவம் நடக்கும். ஜன., 21 அன்று மாலை ஆண்டாள் பெரிய சன்னதியில் எழுந்தருளினார். பெரிய பெருமாளிடம் பிரியாவிடையுடன் மகோத்சவம் துவங்கியது. ஆண்டாள் நவகலச அலங்கார சவுரி திருமஞ்சனம், ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும் நடந்தது.நேற்று ஆண்டாள் தைலக்காப்பு எழுந்தருளல், முத்துக்குறி பார்த்தலும் நடந்தது. நேற்று முன்தினம் காலை பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினார். பின் பெரியாழ்வாரை எதிர் கொண்டு அழைத்து வந்தனர். கல்யாண சீர்வரிசை பொருட்கள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து பெருமாளும்,ஆண்டாளும் ஊஞ்சலில் மாலை மாற்றினர். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு பெருமாளும் ஆண்டாளும் வீதி உலா வந்தனர். கண்காணிப்பாளர் வேல்முருகன் ஏற்பாட்டை செய்தார்.