குரு ராகவேந்திரர் மீது பக்தி கொண்ட ஏழை ஒருவர் அவரது மடத்திற்கு ஏதாவது பொருள் அளிக்க விரும்பினார். ஒருநாள் வீட்டிலிருந்த கடுகை எடுத்துச் சென்று, குருவே! இந்த ஏழை அடியவனின் எளிய காணிக்கையான இந்த கடுகை ஏற்று அருள்புரிய வேண்டும், என்று கொடுத்தார். ராகவேந்திரரும் அதைப் பெற்றுக் கொண்டு அட்சதை துõவி அவருக்கு ஆசியளித்தார். சீடர்களைஅழைத்து கடுகை உணவில் சேர்த்துக் கொள்ள கட்டளையிட்டார். சுவாமி... விரத காலமான இப்போது மடத்தில் தயாரிக்கும் உணவில் கடுகு சேர்ப்பதில்லையே... என்றனர் சீடர்கள். விரத கட்டுப்பாட்டை விட பக்திக்கே சக்தி அதிகம். பக்தியுடன் கொடுக்கும் எதுவும் கடவுளுக்கு மிக விருப்பமானது தான், என்றார் ராகவேந்திரர். அன்றைய உணவிலேயே கடுகும் சேர்க்கப்பட்டது. ராகவேந்திரரும் அந்த உணவை சாப்பிட்டார்.