கோஷ்ட மூர்த்தியாக நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் பிரம்மா, பரங்கிப்பேட்டையில் உள்ள பழமையான முத்துக்குமாரசாமி கோயிலில் கைகூப்பிய நிலையில், அமர்ந்தவாறு காட்சி கொடுக்கிறார். மகா அவதார் பாபாஜியின் தந்தையான சுவேதநாதைய்யர் இந்த கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியுள்ளார்.