திருவேடகம் ஏடகநாதர்சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2016 05:01
திருவேடகம்: சோழவந்தான் திருவேடகம் ஏலவார்குழலியம்மன்,ஏடகநாதர்சுவாமி கோயிலில் தைபூசஉற்சவத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்ததெப்பத்திருவிழா நடந்தது. இக்கோயிலில் தைபூசத்தன்று தெப்பதிருவிழா கமிட்டியினர் சார்பில் கம்பத்தில் கொடிஏறியது. நேற்று பகல் 12 மணிக்கு அம்மன், சுவாமி சர்வஅலங்காரத்தில் வீதி உலா, பின்னர் பிரம்மதெப்பத்தில் எழுந்தருளினர். மாலை 6 மணிக்கு காளியம்மன் கோயில் முன்பு உலகநன்மைக்காக மகளிரணியினரின் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு மின்விளக்கு பஷ்பசப்பரத்தில் ராஜஅலங்காரத்தில் அம்மன்சுவாமி தெப்பத்தை சுற்றி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்வழங்கினர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்தனர். ஏற்பாடுகளை தெப்பவிழா கமிட்டியினர் நடராஜன், ஆதிராமன், மோகன், ராமச்சந்திரன், தேவகுமார், நிர்வாக அதிகாரி சுமதி செய்திருந்தனர்.