காளையார்கோவில்: காளையார்கோவில் தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. தர்மமுனீஸ்வரர் கோவில் திருப்பணி நிறைவு பெற்றதால் நேற்று காலை 7மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதற் காலயாக பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஜன.29ம் தேதி காலை 9.30 மணியிலிருந்து 10.20க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை பூஜாரிகள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் செய்துள்ளனர்.