புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி இ.சி.ஆர் சாலை கொட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜைகள் நடந்தது.
உலகத்தில் அமைதி கிட்டவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், வணிகம் மற்றும் தொழில் நிலை உயரவும், கல்வி மற்றும் செல்வம் பெருகவும், மக்கள் கவலை மறைந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காக நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை குழுவினர் மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.