தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பாகலஅள்ளி பஞ்., பட்டகப்பட்டியில், பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை பட்டாளம்மன் சிலை கரிகோல், தீர்த்தகுடம், முளைபாரி அமைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம் தீபாரதனை நடந்தது. 7.30 மணிக்கு, பட்டாளம்மன் கோவில் கோபுரம், மூலவர் ஸ்வாமிக்கு திருக்குடம் முழுக்கு மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.