அரூர்: மொரப்பூரில், வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் வழிபட்டனர். மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று காலை பால் வடிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி பெண்கள் மரத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களும் வேப்பமரத்தை பார்த்து சென்றனர்.