கொல்கத்தாவில் பிரம்ம சமாஜத்தில் ஒரு நாடகம் நடந்தது. அதில் நடிக்க சுவாமி விவேகானந்தர் துறவி வேடமிட்டிருந்தார். அந்த நாடகத்தைப் பார்க்க குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரும் சென்றிருந்தார். துறவி வேடத்தில் சுவாமிஜி மேடையில் தோன்றியவுடன், அதைப் பார்த்து எழுந்து நின்ற குருதேவர், அவரை உடனே கீழே இறங்கி வருமாறு பலமுறை வேண்டினார். சுவாமிஜி தயங்கி நின்றதைப் பார்த்த கேசவ் சந்திரசென். “அவர்தான் கூப்பிடுகிறாரே, ஏன் கீழே இறங்கி வரக்கூடாது?” என்ற பின்னர், சுவாமிஜி மேடையை விட்டு இறங்கினார். குருதேவர் சுவாமிஜியின் கைகளைப் பற்றிக் கொண்டு, “இதுதான் சரி, இதுதான் சரி ” என்றார்.