மதுரை: மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில், வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: புராண காலத்தில் இருந்து தீர்ப்பு எப்படி வந்தாலும் விமர்சிப்பர். உலகில் சிரிப்பதில் சிறந்து விளங்குபவர் சிவபெருமான். ஷேத்திரங்களுக்கு போக முடியாவிட்டாலும், போகிறவர்களுக்கு உதவலாம். அந்த காலத்தில் பண்டிதர்கள் ஒருவருக்கொருவர் துவேஷம் காட்டியது கிடையாது. நாம் சைவ, வைணவ பேதத்தோடு இருக்கக்கூடாது. ஸ்ரீரங்கத்தில் 12 மாதமும் தாயாருக்கும், பெருமாளுக்கும் தனித்தனி உற்சவம் நடக்கும். சிவன் கோயிலில் ஓதுவார். அதுபோல் ஸ்ரீரங்கத்தில் அறையர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடுவர். கங்கையில் குளித்தால் பாவம் போகும். ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்தால் செய்த பாவமும், இனி செய்கிற பாவமும் போகும். இவ்வாறு பேசினார்.