பதிவு செய்த நாள்
06
பிப்
2016
12:02
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, துறையூர் சாலையில் அமைந்துள்ள ஒஸக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில், 37ம் ஆண்டு பெருவிழா மற்றும் தை அமாவாசை திருவிழா இன்று துவங்குகிறது. இன்று (6ம் தேதி) இரவு, 7 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, ஹோமம், தீபாரதனை, நடக்கிறது. நாளை, (7ம் தேதி) காலை, 8 மணிக்கு மேல் மகாசண்டி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. வரும், 8ம் தேதி காலை, 6 மணிக்கு கணபதி பூஜை, 7 மணிக்கு கோமாதா பூஜை, 8 மணிக்கு அம்மனுக்கு மாங்கல்ய தாரணம், 9 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சக்தி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பகுதிவாசிகள் செய்து வருகின்றனர்.