மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் வைகை நதி சீரமைப்பு திட்டம் சார்பில் பிப்., 22 மாலை 5.00 மணிக்கு, செல்லுார் திருவாப்புடையார் கோயில் பகுதியில் இருந்து நதிவலம் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி கூறியது: வைகை நதி மதுரை நகருக்குள் 8 கி.மீ., உள்ளது. சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ஒரு மண்டலமாக பிரித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறோம். மாதந்தோறும் பவுர்ணமியன்று வைகை நதியின் பெருமையை மாணவர்கள், கரையோர மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நதிவலம் நிகழ்ச்சி நடத்துகிறோம்.ஓராண்டில் கரையோரம் 225 மரங்கள் நட்டுள்ளோம். துாய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரையோரம் வாழும் முதியோர்களை கொண்டு, வைகையின் வரலாற்றை சொல்ல வைக்கிறோம். பிப்., 22 மாலை 5.00 மணிக்கு செல்லுார் திருவாப்புடையார் கோயில் பகுதியில் இருந்து வைகை நதியை சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளோம். வைகையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் பங்கேற்கலாம், என்றார்.