கடலூர் : கடலூர், ராஜாம்பாள் நகர் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத உற்சவத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர், மஞ்சக்குப்பம், ராஜாம்பாள் நகரில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலில் 51வது ஆண்டு ஆடி மாத உற்சவம் கடந்த 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 14ம் தேதி பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை, சாகை வார்த்தல் நடந்தது. மதியம் செடல், கும்பம் கொட்டுதல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று மாலை அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.