பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கொள்ளுப்பாளையம் விநாயகர், காளியம்மன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 12ம்தேதி காலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி லட்சுமி, நவக்கிரகஹோம பூஜை, காலை, 9:00 -10:00 மணிக்கு வேம்பு கல்யாண உற்சவமும், மாலை, 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, 108 திரவியாகுதி, பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, விநாயகருக்கும், காளியம்மனுக்கும் கோபுர கலசங்களுக்கும் மற்றும் பிம்ப மூர்த்திகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு விநாயகருக்கும், காளியம்மனுக்கும் 16 வகை அபிேஷகம், தசதானம், தசதரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், காலை 10:30 மணிக்கு மேல் அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.