காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு, ராமானுஜர் கோவிலில், நேற்று, திருவாதிரை விழா கோலாகலமாக நடைபெற்றது.காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு, தனி கோவில் உள்ளது. ராமானுஜர் பிறந்த திருவாதிரை நன்னாளில், நேற்று, காலை 10:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, தீபாராதணையும், மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சன்னிதி மண்டபத்தில் பக்தர்கள் ராமானுஜர், 108 அந்தாதி பாடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமானுஜரை வழிபட்டனர்.