Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் அரங்கநாதர் ... கடலுாரில் ராதா கல்யாண உற்சவம் கடலுாரில் ராதா கல்யாண உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூரில் இரண்டு திருக்கல்யாணங்கள்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
12:02

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான இரு திருக்கல்யாணங்கள் கோலாகலமாக நடந்தன.

Default Image
Next News

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமணங்களை தரிசித்தனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாசி பிரம்மோற்சவம், கடந்த, 12ம் தேதி துவங்கியது. வரும், 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான, கல்யாணசுந்தரர் - பார்வதி தேவி திருமணம், நேற்று காலை, 9:30ல் இருந்து 11:00 மணிக்குள் நடைபெற்றது. அதையடுத்து, பெண்கள் தாங்கள் கொண்டு வந்த புது தாலிக் கயிற்றை எடுத்து மாற்றிக் கொண்டனர். பக்தர்கள், இனிப்புகளை வழங்கினர். மாலையில், 63 நாயன்மார் அபிஷேகம், ரிஷபாரூடர் மாடவீதி உற்சவம் நடந்தது. இரவு, சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் திருமணம் நடந்தது. பின், திருமணக் கோலத்தில் தரிசனம் தரும் மகிழடி சேவையும், நடராஜர் அபிஷேகமும், அதிகாலை தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.

குடிநீருக்கு பரிதவிப்பு: திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள், குடிநீர் இன்றி பரிதவித்தனர். கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில், கூட்டத்தை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

கோவில் தெப்பக்குளம் அருகே, ஐந்து கழிப்பறைகள் கொண்ட பொது கழிப்பறை இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது போதுமானதாக இல்லை. மொபைல் டாய்லெட் வசதி செய்யப்படவில்லை.

பாதுகாப்பு இடம் இல்லாததால், பக்தர்களின் காலணிகள் திருடு போயின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar