Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளாத்தீஸ்வரர் திருக்கல்யாணம் ... ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம் ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பூர் லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
02:02

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவருக்கு, நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீஹயக்கிரீவர், எம்பெருமானின் ஒரு வடிவம். "ஹயம் என்றால் குதிரை; குதிரை முகம் கொண்டவர். மது, கைபவர் என்ற இரு அரக்கர்கள், நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் மறைத்து விட்டனர். குதிரை முகவடிவம் எடுத்து, கடலுக்குள் சென்று, எம்பெருமான் வேதங்களை மீட்டதாக புராணத்தில் உள்ளது. ஆயக்கலைகள் அனைத்துக்கும் அதிபதியாகவும் குறிப்பிடப்படும் ஹயக்கிரீவர், திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவராக, தனி சன்னதில் எழுந்தருளியுள்ளார். திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஸ்ரீஹயக்கிரீவர் சன்னதியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஐந்து வாரங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பூஜை நடந்தது. சிறப்பு யாகம் மற்றும் சுவாமிக்கு, தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நாம சங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. பொதுத்தேர்வை நினைவாற்றலும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, சிறப்பாக தேர்ச்சி பெறவேண்டும் என்ற பிரார்த்தனையோடு நடத்தப்பட்ட யாகத்தில், 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு, சுவாமி பிரசாதம் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்டவை கொண்ட, பாக்ஸ் வழங்கப்பட்டது. வரும், 28ல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கும்; மார்ச் 6, 13 மற்றும், 17ல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், காலை, 9:00மணி முதல், 12:00 வரை, சிறப்புயாகம், பூஜை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar