பதிவு செய்த நாள்
22
பிப்
2016
02:02
கோத்தகிரி: கோத்தகிரி மேட்டுப் பாளையம் சாலையில் அமைந்துள்ள சக்கத்தா மாரியம்மன்
கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த, 15ம் தேதி, பகல், 12:30 மணிக்கு, சக்கத்தா கிராமத்தில் தீர்த்தம் அழைத்துவரும் நிகழ்ச்சி
நடந்தது. 17ம் தேதி அதிகாலை, 4:30 மணிமுதல், 6:30 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை,
நாடி சந்தானம், மந்திர சன்னவதி ஹோமங்கள், மகா பூர்ணாகுதி மற்றும் விசேஷ உபசாரங்களை தொடர்ந்து, கடம் புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தசதானம் மற்றும் தசதரிசனம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஊட்டி மாரியம்மன் கோவில், தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ விநாயகம் மற்றும் கரூர் ஆகமவிசாரக் சிவஸ்ரீ முரளி சிவாச்சாரியார் ஆகியோர், நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை, சக்கத்தா ஊர் தலைவர் பெள்ளிராஜ், கோவில் கமிட்டியினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.