Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம் ஆலமரத்தெரு கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணமனை கிராமத்தில் ரங்கநாதர் திருவிழாவில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

குன்னுார்: குன்னுார் அருகே உலிக்கல் பண்ணமனை கிராமம் அருகே, ரங்கநாதர் திருவிழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குன்னுார் அருகே, உலிக்கல் பஞ்சாயத்து, பண்ணமனை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில்,
250ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ரங்கநாதர் திருவிழா நேற்று நடந்தது. இங்கு முன்னதாக, பம்பலகோம்பை குறும்பர் இன ஆதிவாசி மக்களின், பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்த பின்பு, கோவில் திறக்கப்பட்டது. இதன் பிறகு, படுக இன மக்கள் சார்பில் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து தீபக்கல்லில் பாரம்பரிய முறையப்படி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு, கவளம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது, பூஜைகளை விரதம் மேற்கொண்ட பூசாரி சுரேஷ்குமார் நடத்தினார்.

இதில், உலிக்கல், பண்ணமனை, தேனலை, கருக்கம்படை, ஆர்செடின் உட்பட சுற்றுப்புற
கிராமங்களை சேர்ந்த ஏராளமான படுக இன மக்கள், ஆதிவாசி மக்கள் பங்கேற்றனர்.
தேனலை கிராம தலைவர் அண்ணாதுரை, பண்ணமனை ஊர் பிரமுகர் ராஜாராம் ஆகியோர்
கூறுகையில்,நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், குறும்பர் ஆதிவாசிகளுடன்
இணைந்து விழா நடத்தப்படுகிறது. இங்கு விழா நடந்த பிறகு, காரமடை ரங்கநாதர் கோவில்
தேரோட்டம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar