Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புலி வாகனத்தில் கோனியம்மன் திருவீதி ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 169வது உழவாரப்பணி! இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் நூதனம்.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பூஜை: வழிபாட்டில் வாழைப்பழம் சூறை!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் நூதனம்.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பூஜை: வழிபாட்டில் வாழைப்பழம் சூறை!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, வாழைப்பழம், கடலை, நெல் ஆகியவற்றை சூறை விட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டி கிராமம் கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் மாசிமாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் பல மாவட்டங்களின் நுாற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கும்.கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட் தடை உள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் பொதுமக்கள் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

வாழைப்பழம் சூறை:
ஜல்லிக்கட்டு நடத்த தடையால் நேற்று கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், 50 ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றாக நிறுத்தி சிறப்பு பூஜை செய்தனர். மாடுகளுக்கு பழங்கள் ஊட்டினர். தொடர்நது வாழைப்பழம், கடலை, நெல் உட்பட நவதானியங்களை சூறை விட்டு வழிபட்டனர். இதில் பூஜாரி வீரபத்திரன், நாட்டாண்மை சின்னைய்யா, பெரியதனம் பாலகுரு, மணியக்காரர் ஆச்சிமுத்து, முருகன் பங்கேற்றனர். நாட்டாண்மை சின்னையா கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக முன்னோர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினர். இந்தாண்டு நடத்தாததால், கிராமத்தில் உள்ளோர் அம்மை உட்பட பல தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இதனால் நாங்கள் கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்துள்ளோம். கடந்த 2 நாட்களில் நோய்கள் குறைந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்வோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar