திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா: புதுச்சேரியில் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2016 11:02
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பர்வின் பயண அமைப்பகம் இணைந்து புதுச்சேரி - திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலாவினை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சொகுசு பேருந்து புதுச்சேரியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருப்பதி சென்றடையும், சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு காலை 5.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.பின்னர் திருச்சானுார் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பின்னர் திருமலைக்கு காலை 11 மணி அளவில் சென்றடையும். அங்கு மதியம் 1 மணிக்குள் தரிசனம் முடித்து மீண்டும் திருப்பதிக்கு வந்து அங்கு மதிய உணவு அளிக்கப்படும். திருப்பதியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரியை அன்று இரவு 10.30 மணிக்கு வந்தடையும் முதற்கட்டமாக இச்சுற்றுலா வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார தினங்களில் இயக்கப்படும். இந்த ஆன்மிக சுற்றுலாவை முதல்வர் ரங்கசாமி இன்று துவக்கி வைக்கிறார்.