அவிநாசி: அணைப்புதூர் அருகிலுள்ள கூப்பிடு விநாயகர் கோவிலில் ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின், வேடர் அலங்காரத்தில் வந்த திருமுருகநாத சுவாமி (சிவபெருமான்), சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நகைகளை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருமுருகநாத சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின், தேவாரம் பாடப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நகையை, எம்பெருமான் அளித்த பின், பூஜைகள் நடந்தன.