மனதை அதன் போக்கில் விட்டுவிட்டால், அது நம்மைப் பாவச் செயல்களில் ஈடுபடுத்தும். எனவே அதைத் தெய்வபக்தி என்ற விலங்கு பூட்டி வைத்திருக்க வேண்டும். மனிதன் துன்பங்களால் துவண்டு போகாமல் இருப்பதற்கு, தெய்வபக்திதான் பெரிதும் உதவுகிறது. பக்தி சாதனை உலகப் பற்றுகளிலிருந்து ஒருவனைக் காப்பாற்றும். தூய பக்தி இம்மையில் இன்பம் அளிப்பதாகவும், மறுமையில் முக்திக்குரிய ஏணியாகவும் விளங்குகிறது. தூய்மையும் வாய்மையும் தொடர்ந்து இருக்கும் உள்ளம், ஆண்டவனின் கோயிலாகி விடும்.