பதிவு செய்த நாள்
27
பிப்
2016
12:02
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகையில் எழுந்தருளியுள்ள, அகோர வீரபத்திரர் கோவிலில், பிப்.,26 கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரும்பேர்கண்டிகையில், சிவ பெருமானின், 64 அவதாரங்களில் ஒரு அவதாரமாக கருதப்படும் அகோர முகத்திலிருந்து உருவான, அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இதில் எழுந்தருளியுள்ள வீரபத்திரர், நான்கு கரங்களிலும் வில், அம்பு, கேடயம், கத்தி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவராய் காட்சி அளிக்கிறார். தீய எண்ணங்களைப் போக்கி, அனைவரை யும் காத்து ரட்சித்து, அனுக்கிரஹிக்கக் கூடிய அகோர வீரபத்திரர் கோவிலில், பிப்.,26 காலை, 8:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், தீர்த்தப் பிரசாதம், அன்னதானங்களும் வழங்கப்பட்டன; பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.