பதிவு செய்த நாள்
27
பிப்
2016
12:02
குறிச்சி: செட்டிபாளையத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா,
பிப்.,26 நடந்தது.
செட்டிபாளையத்திலுள்ள விநாயகர், பத்ரகாளியம்மன், அய்யாசாமி, தன்னாசியப்பன், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா, 23ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவையுடன் துவங்கியது. தொடர்ந்து, லட்சுமி வேள்விகள், தீர்த்தங்கள், முளைப்பாலிகைகள் எடுத்து வருதல், யாக பூஜை துவக்கம் உள்ளிட்டவை நடந்தன.
பிப்.,26 முன்தினம் மாலை, விசேஷ சக்தி, மூன்றாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, நான்காம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹுதி, மகாபூர்ணாஹுதி நடந்தன. 7:45 மணிக்கு மேல், கும்பாபிஷேகத்தை, வேலுசாமி, உமாபதி சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, தச தரிசனம், மகாபிஷேக பூஜைகள், தீபாராதனை பிரசாதம்
வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழி
பட்டுச் சென்றனர்.