பதிவு செய்த நாள்
27
பிப்
2016
12:02
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த மஹாசம்ப்ரோஷண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், மகாசம்ப்ரோஷணம் விழா நடந்தது. அதனையொட்டி 24ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனையும், புண்யாக வாசனமும், அக்னி பிரதிஷ்டையும், சாத்துமுறையும் நடந்தது. 25ம் தேதி காலை 7.30 மணிக்கு அக்னி ஆராதனம், மகாசாந்தி ஹோமம், உக்த ஹோமம், மாலை 4:00 மணிக்கு அங்க ஹோமம், சதுர்தச கலச ஸ்தாபனம், மகாசாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம், மஹாசாந்தி பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, மூர்த்தி ஹோமம் நடந்தது. பிப்.,26 காலை 5:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், அக்னி கும்ப ஆராதனம், ப்ரதான ஹோமம், பூர்ணாஹூதி, யாத்ராதானம், 8:00 மணிக்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலை மையில் கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:45 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், காலை 9:15 மணிக்கு மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹாசம்ப்ரோஷணம் நடந்தது. 9:30 மணிக்கு வேதப்ரபந்த சாத்துமுறை, 10:00 மணிக்கு தீர்த்த ப்ரசாத விநியோம், அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரகுரு எம்.எல்.ஏ., ஏகாதசி பேரவை, ஆண்டாள் சேவை குழு மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
ராமகிருஷ்ண மட தலைமை மாதாஜி அனந்தானஜிமகாராஜ், சாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா, அ.தி. மு.க., மாவட்ட செயலாளர் கதிர் தண்டபாணி, அழகுவேல் பாபு எம்.எல்.ஏ., மயில்மணிகுமரகுரு, நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், பேரூராட்சி தலைவர்கள் ஜெய்சங்கர், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் வினாயகமூர்த்தி, முக்கியஸ்தர்கள் சிவராஜ், நடராஜன், வசந்தலட்சுமி, அன்பழகன், மாலதி ராமலிங்கம், ஒன்றிய சேர்மன்கள் பாலு, பச்சையம்மாள் வைத்தியலிங்கம், துணை சேர்மன் சாய்ராம், அசோகன் கலந்து கொண்டனர்.