பதிவு செய்த நாள்
27
பிப்
2016
01:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மகாமுனி பூஜை பிப்.,26 முன்தினம் நடந்தது.
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி மயான பூஜையும், 22ம் தேதி காலை 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடந்தன. முன்தினம் காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திர தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 24ம் தேதி குண்டம் திருவிழா நடந்தது. இதனைத்தொடர்ந்து,
பிப்.,26 முன்தினம் காலை 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகா முனி பூஜையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பிப்.,26 மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளும் நடந்தன.