பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு, கோவில் குருக்கள் பாலாஜி சிவம் தலைமையில் நேற்று சிறப்பு யாக வழிபாடு நடந்தது. பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மன பயம், ஞாபக மறதி, உள் வேதனை, சோம்பல், விளையாட்டு தன்மை ஆகியவை நீங்கி தெளிந்த சிந்தனையோடு படித்த பாடங்கள், மறக்காமல் இருக்கவும் தன்னம்பிக்கையும் பெறும் பொருட்டு, இந்த வழிபாடு நடந்தது. இதில் பவானி, காளிங்கராயன்பாளையம், குமாரபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.